கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சேவையும் எங்கள் அமைப்பின் அடிப்படை நோக்கங்களை பிரதிபலிக்கிறது.
இந்துக்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை வளர்ப்பதும், சமுதாயத்தினரிடையே பரஸ்பர ஒத்துழைப்பையும் ஐக்கியத்தையும் மேம்படுத்துவதும் எங்கள் முதன்மையான நோக்கமாகும்.
இந்து தர்மத்தின் மதிப்புகளையும் பாரம்பரியங்களையும் காத்து, ஆன்மீக வளர்ச்சிக்கும் தர்ம பணிகளுக்கும் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறோம்.
இந்து கோயில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல், சீரமைத்தல் மற்றும் சிதிலமடைந்துள்ள பழமையான கோயில்களைப் புனரமைக்க உதவுதல் ஆகியவை எங்கள் முக்கியப் பணிகள்.
பசுக்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் போன்ற துறைகளில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இயன்ற உதவிகளை வழங்குவதுடன், சட்டரீதியான வழிகாட்டுதலும் அளிக்கிறோம்.
தேவைப்படும் நேரம் தேவைப்படும் இடங்களில் இந்து பாதுகாப்பு படை நிர்வாகிகளையே உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநிலங்களவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அமைப்பே முன்னின்று அந்தந்த பகுதிகளில் அந்தந்த நிர்வாகிகளை வேட்பாளராக நிறுத்தி க்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அதற்கான அனைத்து வகையான உதவிகளையும் அமைப்பை முன் ஒன்று செய்து கொடுக்கும்
தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து, சமுதாய நலனுக்காக பங்களியுங்கள்.
மேலும் அறிய